Tag Archives: வரலாறு

இரணியல் அரண்மனை: அழிவின் விளிம்பில் வேணாடு சேரர்களின் அரண்மனை

சேரமான் பெருமாள் என்ற வேணாட்டுச் சேர மன்னர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கட்டிய அரண்மனை மற்றும் கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் கிராமத்தில் அமைந்துள்ளது. தற்போதைய பத்மநாபபுரம் அரண்மனையைப் போலக் கட்டப்பட்ட மரத்தாலான அரண்மனை, பிற்காலத்தில் ஓடு வேயப்பட்டுள்ளது. படிப்புரா, குதிரமாளிகா, வசந்தமண்டபம் ஆகிய மூன்று பகுதிகள் இந்த அரண்மனையில் காணப்படுகின்றன.வசந்தமண்டபத்தின் பள்ளியறையில் பளிங்கில் செதுக்கப்பட்ட கட்டில் பலரையும் கவர்ந்து வருகிறது. ஓடு வேய்ந்த இரட்டைத் தளக் கட்டடங்கள் சிதைந்து போய்விட்டன. பலர் மரங்களைத் திருடிச் சென்றுவிட்டனர். கி.பி. 1601 ஆம் ஆண்டு சேரமான் பெருமாள் வம்சத்தினர் பத்மநாபபுரத்திற்குத் தலைநகரை மாற்றியதால் இரணியல் அரண்மனை சிதைந்து, புதர் மண்டி ஆழிந்து வருகிறது. Continue reading

Posted in கேரளா, சுற்றுலா, தொல்லியல், மலையாளம், வரலாறு | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பொம்மலகுட்டா சமண யாத்திரைத் தலமும் வரலாற்றுச் சிறப்புமிக்க வேமுலவத சாளுக்கியரின் மும்மொழிக் கல்வெட்டும்

ஆந்திரப்பிரதேச மாநிலம், கரீம்நகர் மாவட்டம் குரிக்கியாலா கிராமத்தில் அமைந்துள்ள பொம்மலகுட்டா குன்றின் மீது, இராஷ்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணனின் கீழ் ஆட்சிபுரிந்து வந்த வேமுலவத சாளுக்கிய (Chalukyas of Vemulavada) மன்னன் இரண்டாம் அரிகேசரி (கி.பி. 930-55) காலத்தில் ஆதிகவி பம்பாவின் இளைய சகோதரரான ஜீனவல்லபா,  திரி-புவனா-திலக என்னும் பெயர் தாங்கிய சமண யாத்திரைத் தலத்தை அமைத்துள்ளார். இக்குன்றின் உச்சியில் உள்ள பாறை ஒன்றின் மீது சமண இயக்கி (யட்சி) சக்ரேஸ்வரியின் புடைப்புச் சிற்பமும், இச்சிற்பத்தைச் சுற்றி காயோசர்க்க கோலத்தில் எட்டு சமணர்களின்   புடைப்புச் சிற்பங்களும் நான்கு தொகுப்புகளாகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பத் தொகுப்பிற்கு நேர் கீழே இரண்டாம் அரிகேசரியின் பதினோரு வரிக் கல்வெட்டு தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழியில் சிறந்த கவிஞராகத் திகழ்ந்த பம்பாவின் புரவலர் அரிகேசரி ஆவார். இந்த சமணக் கவிஞரின் பரம்பரை மற்றும் கவித்திறன் பற்றிய சிறப்பான செய்திகளை இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. Continue reading

Posted in சமண சமயம், தொல்லியல் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வளரி: பூமராங் போன்ற தமிழர்களின் எறிகருவி

வளரி என்பது பண்டைக்காலத்தில் தமிழர்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை ஏறி கருவியாகும். வளரி என்ற பெயர் வாள் என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தொலைவில் இருக்கும் எதிரியைத் தாக்குவதற்குச் சிறந்த ஆயுதம் இதுவாகும். வளரிக்கு ஒத்த எறிகருவிகளை எரிவளை, திகிரி, வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.

மரத்திலும் இரும்பிலும் தந்தத்திலும் செய்து பயன்படுத்தப்பட்ட வளரி எறிகருவியின் வகைகளை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்திலும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் சில அருங்காட்சியகங்களிலும் காட்சிப்படுத்தியுள்ளார்கள். Continue reading

Posted in வரலாறு | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்