Tag Archives: வராஹர்

பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 3

பாதாமியில் முதன் முதலாவதாக அமைக்கப்பட்ட இந்த மூன்றாம் குடைவரை, தக்கணப் பகுதியில் அமைந்துள்ள இந்துக் குடைவரைகளிலேயே, மிகவும் தொன்மையானது. இங்கு காணப்படும் சாளுக்கிய மன்னன் கீர்த்திவர்மனின் கி.பி. 578 ஆம் ஆண்டுக் கல்வெட்டு, இந்தக் குடைவரை கி.பி. 578 – 580 ஆம் ஆண்டுகளுக்கிடையே அகழப்பட்டதாகப் பதிவு செய்கிறது. மூன்றாம் குடைவரையை அடுத்து இந்த இரண்டாம் குடைவரையும், இதன்பின் முதலாம் குடைவரையும், இறுதியில் நான்காம் குடைவரையும் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. வடக்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடைவரையும் விஷ்ணுவிற்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாதாமியில் உள்ள மற்ற மூன்று குடைவரைகளைக் காட்டிலும் அளவில் பெரியது. விஷ்ணுவின் அவதாரங்களான திரிவிக்கிரமா, ஆனந்தசயனா, வாசுதேவா, வராஹா, ஹரிஹரா மற்றும் நரசிம்மர் ஆகிய சிற்பத் தொகுப்புகள் இக்குடைவரையின் சுவர்களில் நேர்த்தியாகச் செதுக்கப் பட்டுள்ளன. இந்த மூன்றாம் குடைவரையில் அமைந்துள்ள சிற்பங்கள் எல்லோரா குகைகளில் காணப்படும் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடக்கு தக்காண (டெக்கான்) பாணிச் சிற்பங்களைப் போலவே உள்ளன. இந்தப் பதிவு பாதாமியின் மூன்றாம் குடைவரையைப் பற்றி விவரிக்கிறது. Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 2

முதல் குடைவரையிலிருந்து 64 படிகளைக் கடந்து சென்றால் உங்கள் வலது புறத்தில் பாதாமியின் இரண்டாவது குடைவரைக் கோவிலைக் காணலாம். விஷ்ணுவே இக்குடைவரையின் மூலவர் ஆவார். இக்குடைவரையில் விஷ்ணுவின் அவதாரங்களான வராஹர், திரிவிக்கிரமன் ஆகியோரைக் காட்டும் சிற்பத் தொகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை கி.பி. 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டதாகும். பாதாமியில் முதன் முதலாவதாக அமைக்கப்பட்ட மூன்றாம் குடைவரையை அடுத்து இந்த இரண்டாம் குடைவரை அமைக்கப்பட்டதாக நம்ம்பபடுகிறது. இந்த இரண்டாம் குகையில் அமைந்துள்ள சிற்பங்கள் எல்லோரா குகைகளில் காணப்படும் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடக்கு தக்காண (டெக்கான்) பாணிச் சிற்பங்களைப் போலவே உள்ளன. இந்தப் பதிவு பாதாமியின் இரண்டாம் குடைவரையைப் பற்றி விவரிக்கிறது. Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்