Tag Archives: வாழப்பள்ளி

இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.

இரண்டாம் சேர குலமரபில் வந்த அரசர்கள் பெருமாள்கள் (Perumals) என்றும் சில சமயங்களில் குலசேகரர்கள் (Kulasekharas) என்றும் அழைக்கப்பட்டனர். இரண்டாம் சேர வம்சத்தவர்களின் அரசு (second Chera kingdom) நிறுவப்பட்டு, கி.பி 9 ஆம் நூற்றாண்டில், பெருமாள் அரசர்களின் ஆட்சி (rule of the Perumals) தொடங்கியது. மகோதயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த குலசேகரர்களின் ஆட்சி சேரர் (கேரள) வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. புகழ்பெற்ற இந்தப் பெருமாள் குல அரசர்கள் கி.பி 800 முதல் கி.பி 1124 வரை அன்றைய சேரநாட்டை ஆண்டு வந்ததாகக் கருதப்பட்டது. எலம்குளம் பி.என். குஞ்சன் பிள்ளை மற்றும் எம். ஜி. எஸ். நாராயணன் போன்றவர்கள் இடைக்காலச் சேரர்களின் வரலாற்றைப் பல்வேறு கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். மகோதயபுரம் குலசேகரர்களின் ஆட்சிக்காலம் குறித்த வரலாறு, அறிஞர்களிடையே வாதவிவாதப் பொருளாக இருந்து வருகிறது. Continue reading

Posted in கேரளா, சேரர்கள், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

வாழப்பள்ளி மகாதேவர் கோவில் செப்பேடும் மலையாள மொழியின் செம்மொழித் தகுதியும்

இந்தியாவின் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகம் (Union Ministry for Culture, Government of India), மலையாள மொழியை இதன் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செம்மொழி (Classical language) என்று வகைப்படுத்த வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது. இந்த வல்லுநர் குழு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 19 நாளன்று  அளித்த பரிந்துரையை பண்பாட்டுத் துறை அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. மத்திய அமைச்சரவை இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு  2013 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாளன்று மலையாள மொழியைச் செம்மொழி (Classical language) என்று, வகைப்படுத்தித் தகுதி வழங்கியுள்ளது.  வாழப்பள்ளி செப்பேடு வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட ஓர் இன்றியமையாத ஆவணம். வாழப்பள்ளி மகாதேவர் கோவில் பற்றிய ஒரு தீர்ப்பாணையும் (decree), திருவாற்றுவையைச் சேர்ந்த சிலரிடையே ஏற்பட்ட உடன்படிக்கையும் ஆகும். இந்தத் தீர்ப்பனையை இரண்டாம் சேரப் பேரரசின் / குலசேகரப் பேரரசின் அரசரான இராஜசேகர வர்மா வெளியிட்டுள்ளார். இந்தச் செப்பேடு எவ்வாறு மலையாளம் செம்மொழி தகுதி பெற உதவியது என்பது பற்றி இந்தப்பதிவு விவரிக்கிறது.
Continue reading

Posted in கேரளா, தொல்லியல், மலையாளம், மொழி | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்