Tag Archives: ஹனுமான்

கோட்டுக்கல் குடைவரைக் கோவில், கேரளா

கி.பி. 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில குடைவரைக் கோவில்களைக் கேரளாவைச் சுற்றிக் காணலாம். இந்த இந்துக் குடைவரைக் கோவில்களில் சிக்கலான கட்டிடக்கலையையோ அல்லது நுட்பமான சிற்பவேலைப்பாட்டையோ காணமுடியவில்லை. கேரளாவின் குடைவரைக் கட்டடக்கலை, தமிழ்நாட்டுக் குடைவரைக் கட்டடக்கலைப் பாரம்பரியத்திலிருந்து பரவியிருக்கலாம். இந்தக் குடைவரைகள் கேரளாவில் இரண்டு பகுதிகளில் திரண்டுள்ளன: ஒன்று பழைய சேர நாடு என்று அறியப்படும் வடகேரளம் மற்றொன்று ஆய் நாடு என்றறியப்படும் தென் கேரளம். கோட்டுக்கல் குடைவரைக் கோவில் கொல்லம் மாவட்டம், திருவனந்தபுரம் – கோட்டயம் எம்.சி. சாலையில் அமைந்துள்ளது. இந்தக் குடைவரை கோவில் கேரளக் குடைவரை கோவில் கலைப்பணியைக் கொண்டுள்ளது. கொட்டுக்கல் குடைவரை வளாகத்தில் சீரற்ற அளவில் இரண்டு குடைவரைகள் அமைந்துள்ளன. இந்தப்பதிவு இக்குடைவரைகளின் கட்டிடக்கலையமைப்பு மற்றும் வரலாறு பற்றிப் பதிவு செய்கிறது.
Continue reading

Posted in கோவில், தொல்லியல், வரலாறு, Uncategorized | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக