Tag Archives: ஹைதராபாத்

சாலார் ஜூங் அருங்காட்சியகம், ஹைதராபாத்

சாலார் ஜூங் அருங்காட்சியகம், தெலிங்கானா மாநிலம், ஹைதராபாத் மாவட்டம், ஹைதராபாத் நகரம், தாருலஷிபா, நயா புல், எண் 22-8-299/320, சாலார் ஜூங் சாலையில் அமைந்துள்ளது. மூசி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய அருங்காட்சியகமாகவும்,  உலகின் மிகப்பெரிய தனி-மனிதத் தொகுப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  ஹைதராபாத்தில் சார்மினார், மெக்கா மசூதி, உயர் நீதிமன்றம், மாநில மத்திய நூலகம் போன்ற  சுற்றுலாத் தலங்களுக்கு அருகே அமைந்துள்ள இந்த அருங்காட்சியம் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
Continue reading

Posted in தொல்லியல், வரலாறு | Tagged , , , , , | 6 பின்னூட்டங்கள்

பிர்லா மந்திர், ஹைதராபாத்

பிர்லா மந்திர் தெலிங்கானா மாநிலம், ஹைதராபாத்  நகரின் ஆதர்ஷ் நகர் காலனி, (பின் கோடு 500063) காசி பஜார் (Gasi Bazar), காகர்வாடியில்  (Kakarwadi) அமைந்துள்ளது. இக்கோவில் உசைன்சாகர் ஏரியின் தென்கரையில், 85 மீ. (280 அடி) உயரம் கொண்ட நௌபத் பர்பத் (Naubat Parbat) என்னும் காலா பஹத் குன்றின் (Kala Pahad Hillock) மேல், 13 ஏக்கர் (53,000 சதுர மீ.) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 2000 டன் தூய இராஜஸ்தான் வெள்ளைச் சலவைக் கல் கொண்டு பிர்லா அறக்கட்டளையால் (Birla Foundation) கட்டுவிக்கப்பட்ட இக்கோவில் வேங்கடேஸ்வரருக்கு அற்பணிக்கப்படுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இந்தக் கோவிலை இராமகிருஷ்ணா மிஷனரியைச் சேர்ந்த சுவாமி அரங்கநாதானந்தா 1976 ஆம் ஆண்டில் திறந்து வைத்துள்ளார். இதன் அமைவிடம் :17.4061875°N அட்சரேகை 78.4690625°E தீர்க்கரேகை ஆகும். Continue reading

Posted in கோவில் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இராமோஜி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத்

நீங்கள் உங்கள் வார விடுமுறையை முழுமையாகச் செலவிட்டு ஓய்வெடுக்கவோ அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அற்புதமான நேரத்தைச் செலவிடவோ அல்லது உங்கள் புது மனைவியுடன் தேன்நிலவு செல்லவோ விரும்புகிறீர்களா? ராமோஜி ஃபிலிம் சிட்டியில், உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு மேலாகவே, நீங்கள் விரும்பிய எல்லாவற்றையும் சிறப்பாக அனுபவித்து மகிழலாம்.

இராமோஜி ஃபிலிம் சிட்டி அல்லது இராமோஜி திரைப்பட நகரம் (Ramoji Film City) 1996 ஆம் ஆண்டில் இராமோஜி குழுமத்தால் (Ramoji Group of Companies) திட்டமிட்டு அமைக்கப்பட்ட மிகப்பெரிய திரைப்பட நகரம் ஆகும். ஹைதராபாத் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில், 674 ஹெக்டேர் (1666 ஏக்கர்) பரப்பளவில், உலகத் தரத்துடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு வசதிகளுடன், பரந்து விரிந்த இந்தத் திரைப்பட நகரம் மில்லியன் கனவுகள் நகரம் (Land of Million Dreams) என்று விவரிக்கப்படுகிறது. ஆரவாரமிக்க பகட்டான அமைவிடம், அழகான நிழற்சாலைகள், தத்ரூபமான திரைப்படச் செட்டுகள் மற்றும் தலைசிறந்த உள்கட்டமைப்புகளுடன் கூடிய சாலைகள் மற்றும் பல தலைப்புகளில் அமைந்த பூங்காக்கள் (Theme Parks on Various Subjects) எல்லாம் இந்த வளாகத்தைத் திரைப்படத் தயாரிப்பளர்களின் மிகப்பெரிய சொர்க்கம் என்றும் சித்தரிக்கிறார்கள்.

இந்தச் செல்லுலாய்டு வளாகத்தில் நுழைந்தால் கனவுகள், கற்பனை உலகங்கள், எல்லாம் உருமாற்றம் பெற்றுத் திரைப்படங்களாக்கும் வித்தையை நேரிடையாகக் காணலாம். உங்களுடைய குழந்தை உள்ளமும், ரசிகத்தன்மையையும், உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் தயாரிக்கும் ஆர்வமும் இங்குள்ள பல திரைப்படச் செட்டுகளுடன் ஒன்றுவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். சுற்றுலாப் பயணிகள் மற்றும் சினிமா இரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் பல இந்த அற்புதமான இடங்களை நீங்கள் இந்த வளாகத்தில் காணலாம். Continue reading

Posted in சுற்றுலா, திரைப்படம் | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்