Tag Archives: ஹைதர் அலி

புள்ளலூர்: காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் நடைபெற்ற மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் 2

பல்லவ சாளுக்கியப் போர் நடந்த அதே புள்ளலூர் கிராமத்தில் 1,161 ஆண்டுகளுக்குப் பின்பு மைசூர் சுல்தானகத்திற்கும்  (Sultanate of Mysore) பிரிட்டானிய கிழக்கு இந்தியக் கம்பெனிக்கும் இடையே கி.பி. 1780 ஆம் ஆண்டிலும் கி.பி. 1781 ஆண்டிலும் ஆக இரண்டு காலகட்டங்களில் நடந்த போர் இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் என்று பெயர் பெற்றது.  

மேஜர் ஜெனரல் சர் ஹெக்டர் மன்றோவின் தலைமையில் ஓர் ஆங்கிலேயப்படை மதராசிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி முன்னேறியது. கர்னல் வில்லியம் பெய்லியின் தலைமையில் ஒரு கூடுதல் படை, ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்றது. 1780 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி புள்ளலூரில் கர்னல் பெய்லியின் படையை ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் தங்கள் படைகளுடன் வழிமறித்து இரு வேறு பிரிவாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலால் ஆங்கிலேயப்படை நிலைகுலைந்து பலத்த சேதத்திற்கு உள்ளானது. கர்னல் பெய்லி சிறைப்பிடிக்கப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் நிலவறைச் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டு மரணித்தார்.

இன்று ஆகஸ்டு 27, 2018 செவ்வாய்க்கிழமை. இன்றைக்குச் சரியாக 237 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1781 ஆம் ஆண்டு இதே ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதியன்று, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியும் மைசூர் சுல்தானகப் படையும் புள்ளலூரில் இரண்டாம் கட்டமாக (ஆங்கிலேய மைசூர்) போரில் ஈடுபட்டனர். இப்போரில் மரணம் எய்திய இரண்டு ஆங்கிலேய அதிகாரிகளின் (கேப்டன் ஜேம்ஸ் ஹிஸ்லப் மற்றும் லெப்ட். கர்னல் ஜார்ஜ் பிரௌன்) நினைவைப் போற்றும் வகையில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி புள்ளலூரில் இரண்டு சதுரக்கூம்பகத் தூண்களை (TWO OBELISKS) நிறுவியது. இப்பகுதியை உள்ளூர் மக்கள் கோரித்தோப்பு என்றும் நினைவிடத்தைக் கோரிமேடு என்றும் அழைக்கின்றனர். இத்தலைப்பில் முதலாம் பதிவைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பதிவு புள்ளலூரில் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர்களைப் பற்றி விவரிக்கிறது. Continue reading

Posted in தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு, Uncategorized | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்