Tag Archives: தலைமன்னார்

இராமர் பாலம் என்னும் ஆடம்ஸ் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா?

இராமர் பாலம் = Rama’s Bridge  (இராமர் சேது (Rama Setu) என்னும் ஆடம்ஸ் (ஆதாமின்) பாலம் (Adam’s Bridge), மனிதனால் உருவாக்கப்பட்ட, நமது நாகரீகத்தின் மிகப்பழைய, பாலம் ஆகும். இப்பாலம் குடிமுறைப்  பொறியியலின் ஒரு வியப்பு (a Civil Engineering Marvel) என்று கருதப்படுகிறது. இராமர் பாலம் மற்றும் ஆடம்ஸ் பாலம் ஆகிய பெயர்கள் முறையே இந்து மற்றும் இஸ்லாமிய புராணங்களில் இருந்து பெறப்பட்ட பெயர்களாகும். இராமர் பாலம் என்னும் பெயர் இந்து இதிகாசமான இராமாயணத்திலிருந்து பெறப்பட்டது. இராமன் கடத்தப்பட்ட தன் மனைவியான சீதாவை மீட்க இலங்கை செல்வதற்காகக் வானரசேனைகளின் உதவியுடன் கட்டிய அணைக்கு இராமர் பாலம் (இராம சேது) என்று பெயர். இதன் காரணமாகவே இராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் கடல்கூட “சேதுசமுத்திரம்” என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தப் பாலம் ஸ்ரீராமர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் என வால்மிகியின் ஸ்ரீமத்ராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இஸ்லாமிய புராணத்தின்படி ஆதாம் (Adam), இலங்கையில் ஆதாமின் சிகரத்தை (Adam’s Peak) அடைவதற்கு இந்தப் பாலத்தைப் பயன்படுத்தினார், அங்கு 1,000 ஆண்டுகளுக்கு மனந்திரும்பி நின்றார் (stood in repentance).

பாலம், அல்லது சேது என்பது தற்போது ஒரு தொடர்ச்சியற்ற சங்கிலி மணற்திட்டுகளாகக் காணப்படுகிறது. இந்தப் பாலமானது இந்தியாவின் பாம்பன் (ராமேஸ்வரம்) தீவின் தென்கிழக்கு முனைக்கும், வடமேற்கு இலங்கையில் உள்ள தலைமன்னருக்கும் இடையே கிழக்கு-மேற்கு திசையில் 30 கி.மீ. நீளத்தில் அமைந்திருந்தது. இந்தப் பாலம் பால்க் வளைகுடாவிற்கும் மன்னார் வளைகுடாவிற்கும் இடையே ஒரு புவியியல் பிளவினை உருவாக்கியுள்ளது.

இஃது ஒரு பாலம் அல்ல வெறும் மணல் திட்டுகளே. அலைகளின் சுழற்சியால் இந்தத் திட்டுகள் உருவாக்கி இருக்கலாம் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது. இராமர் சேது என்பது கட்டுக்கதை என்றும் இராமன் என்ன பொறியியல் வல்லுனரா? அவர் எந்தக் கல்லூரியில் படித்தார் என்றெல்லாம் திரு. மு.கருணாநிதி வாதிட்டார். இராமர் சேது மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் தான் என்று நாசா விஞ்ஞானிகள் உள்ளிட்ட பல அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்தப் பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை என்றும் அமெரிக்க சயின்ஸ் சேனல் தெரிவித்துள்ளது. மணல் திட்டுகள் உருவாகியுள்ளது உண்மை என்றாலும் இவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியிருக்கலாம் என்றும் இத்திட்டுகளின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான் என்றும் அமெரிக்க சயின்ஸ் சேனல் கருதுகிறது. இந்தப் பதிவு இது குறித்து விவாதிக்கிறது. Continue reading

Posted in சுற்றுலா, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்