Tag Archives: 2018

மைலாப்பூர் திருவிழா 2018

மைலாப்பூர் திருவிழா (Mylapore Festival) என்பது ‘மைலாப்பூர் டைம்ஸ்’ (Mylapore Times) இலவச வார இதழ் பத்திரிகை வெளியீட்டாளர்களும், சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வருடாந்திரத் திருவிழாவாகும். இந்தத் திருவிழா 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 23 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 2018 ஆம் ஆண்டுக்கான மைலாப்பூர் திருவிழா ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஜனவரி 7 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும்.

இந்தத் திருவிழா மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில், கோவில் தெப்பக் குளம், தேரடி, கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கோலப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடனம் மற்றும் கிளாசிக்கல் நடன நிகழ்ச்சிகள், தாயக்கட்டம், பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறைகள், நாகேஸ்வர ராவ் பூங்காவில் சிறார்களின் இசை நிகழ்ச்சிகள் என்று  பல கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 200 கலைஞர்களுக்கு மேல் பங்குபெறும் முப்பதிற்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டுத் திருவிழாவில் இடம்பெற்று வருகின்றன. சென்னை மக்களுக்குச் சொல்லத் தேவையில்லை. குடும்பத்துடன் சென்று வருகிறார்கள். இந்தப் பதிவு வெளியூரிலும் வெளி நாட்டிலும் வசிப்பவர்களுக்காக இங்குப் பதிவு செய்கிறேன். இது பற்றி உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமாக நிச்சயம் இடுவீர்கள்.  
Continue reading

Posted in கோவில், விழாக்கள் | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்