Tag Archives: கர்நாடகா

சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி சாகச விளையாட்டு மற்றும் இயற்கை முகாம்: கர்நாடகாவில் காவிரிக்கரை சுற்றுலா

காவிரியை அதன் கரையோரமாகவே சென்று முழுவதும் பார்த்துவிட வேண்டும் என்ற அவாவில் உந்தப்பட்டு, தி ஜானகிராமன், சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) ஆகிய இரண்டு எழுத்தாளர்கள் தலைக்காவிரி நோக்கிக் காரில் பயணம் மேற்கொண்டனர். இவர்களுடைய பயண அனுபவங்களைக் கட்டுரை நூலாகத் தொகுத்து “நடந்தாய்; வாழி, காவேரி!” என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலை வாசித்த பின்னர் எப்படியாவது இந்த சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சியைப் பார்த்துவிடவேண்டும் என்ற வேட்கையில் ஒருநாள் பயணமாகச் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி காவிரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் மீன்பிடி முகாம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தோம். இந்தப் பயணம் பற்றிய பதிவு இதுவாகும். Continue reading

Posted in சுற்றுலா | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

மாண்யபுரா என்ற மண்ணே: அழிவின் விளிம்பில் மேலைக் கங்கர்களின் தலைநகரம்

மண்ணே பெங்களூரு ஊரகப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஆகும். ஒரு காலத்தில் இந்தக் கிராமம் மாண்யபுரா என்ற பெயருடன் மேலைக் கங்க வம்சத்தினரின் தலைநகரமாகத் திகழ்ந்தது. கி.பி. 350 ஆம் ஆண்டு தொடங்கிப் பத்தாம் நூற்றாண்டு வரை மேலைக் கங்க வம்சத்தினர் பண்டைய தென்-கர்னாடகத்தின் கணிசமான பகுதிகளை (மைசூர், ஹாசன் சாமராஜநகர், தும்கூர், கோலார், மாண்டியா மற்றும் பெங்களூரு பகுதிகளை) கங்கவாடி என்ற பெயரில் ஆண்டுவந்தனர். குவலாலபுரா என்றும் கோலாகலபுரா என்றும் அழைக்கப்பட்ட பண்டைய நகரம் இவர்களின் முதலாவது தலைநகரம் ஆகும். இஃது இன்றைய கோலார் நகராமாகும் (அமைவிடம் 13.13°N அட்சரேகை 78.13°E தீர்க்கரேகை). கோலார் தலைநகராக சுமார் 20 ஆண்டுகள்வரை இருந்துள்ளது. தொடர்ந்து சில காலம் மாண்யபுரா இவர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. இறுதியாக மைசூர் மாவட்டத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள தலக்காடு (அமைவிடம் 12.22°N அட்சரேகை 77.03°E தீர்க்கரேகை) இவர்களுடைய தலைநகரானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான தலைநகராக விளங்கிய மாண்யபுரா இன்று மண்ணே என்ற பெயருடன் ஒரு குக்கிராமமாகச் சுருங்கிவிட்டது. மேலைக் கங்கர்களால் கட்டப்பட்ட பல்வேறு கோவில் கட்டமைப்புகள் இன்று முற்றிலும் சிதைந்து போதிய பராமரிப்பின்றி இடிபாடுகளுடன் காணப்படுவது வேதனைக்குரியது. மேலைக் கங்கர்களின் இந்தத் தலைநகரத்தைச் சரித்திரம் மறந்துவிட்டது. Continue reading

Posted in கோவில், சுற்றுலா, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , | 6 பின்னூட்டங்கள்

பனவாசி மதுகேஸ்வரா கோவில்: கடம்பர்களின் அற்புதக் கலைப்படைப்பு

மதுகேஸ்வரா கோவில், கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடகம், சிர்சி மாவட்டம், பனவாசி வட்டம், பெல்காம் வட்டாரம், பனவாசி (English: Banavasi; Kannada: ಬನವಾಸಿ) பின் கோடு 581318 கிராமத்தில் அமைந்துள்ள, கடம்ப வம்சதவர்களின் கட்டடக் கலைபாணியைப் பறைசாற்றும், கோவிலாகும். கடம்பர் காலத்திய கட்டடக் கலையின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் இக்கோவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கடம்ப மன்னர்களால் கட்டப்பட்டது. ஒரே கல்லாலான கல் மஞ்சமும், திரைலோக மண்டபமும் இந்தக் கோவிலின் உன்னதக் கலைப்படைப்பு ஆகும். இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற இக்கோவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாதலமாகவும் விளங்குகிறது.  Continue reading

Posted in கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , | 13 பின்னூட்டங்கள்