Tag Archives: விஷ்ணு

தொண்டூர்: பஞ்சனாப்பாடி குன்றில் சமணர் குகைத்தளங்கள், பல்லவர் கால விண்ணாம்பாறை விஷ்ணு சிற்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் சமணம் செழித்தோங்கியது. இம்மாவட்டத்தில் கி.மு. முதல் நூற்றாண்டு தொடங்கிப் பல சமண சமயச் சான்றுகள் கிடைத்துள்ளன. செஞ்சி வட்டத்தில் உள்ள மலைக்குன்றுகளில் 2000 ஆண்டுகள் பழமையான சமணர் குகைத் தளங்களும், கற்படுக்கைகளும், தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், பாறைகளில் செதுக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் காணக்கிடைக்கின்றன.

தொண்டூர் கிராமத்தின் அருகே பஞ்சனாப்பாடி என்ற மலைக்குன்றில் அமைந்துள்ள இயற்கையான சமணர் குகைத் தளம், கற்படுக்கைகள், 23 ஆம் தீர்த்தங்கரரான பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் மற்றும் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைக் காணலாம். கல்வெட்டு கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கணிக்கப்பட்டுள்ளன. இந்தச் சமணர் குகைத்தளம் தொல்லியல் துறையினரின் பராமரிப்பில் இல்லாதது வியப்புக்குரியது.  பராமரிப்பு இல்லாமல் பாழடையும் இந்த நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும். 

தொண்டூர் அருகே வயல் வெளியில், விண்ணாம்பாறை என்று அழைக்கப்படும் தனிப் பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதியில் விஷ்ணு வலமிருந்து இடமாகப் பள்ளிகொண்ட கோலத்தில் அனந்தசயன விஷ்ணுவாக யோக நித்திரையில் காட்சி தருகிறார். மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கப்பட்ட இந்த அனந்தசயன விஷ்ணுவின் நீண்ட கிரீடமகுடம் கம்போடிய படிமவியல் கலைப்பாணியை நினைவுபடுத்துகிறது.    கம்போடியா நாட்டுடன் பல்லவர்கள் கொண்டிருந்த தொடர்புக்கு சான்றாக அமைந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். Continue reading

Posted in சமண சமயம், தொல்லியல், படிமக்கலை, வரலாறு | Tagged , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

பாதாமி: புத்தர் குகைத்தளம், அனந்தசயன விஷ்ணு கோவில், கப்பெ அரபட்டா கல்வெட்டு

பாதாமியில் நாம் கண்ட இந்த நான்கு குடைவரைக் கோவில்களைத் தவிர, வேறு சில இயற்கைக் குகைகளும் இடைக்காலத்தைச் சேர்ந்த கற்கோவில்களும் உள்ளன. முன்பு நாம் பார்த்த அகஸ்தியர் தீர்த்த  குளத்தையொட்டி கிழக்குத் திசையில் பூதநாதா கோவில்களின் தொகுதியின் அருகே கி.பி. 7 – 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறிய அளவில் அமைந்த சாளுக்கியர் காலத்து இயற்கைக் குகைத்  தளம் ஒன்று காணப்படுகிறது. இதனை அடுத்து ஒரு சிறிய கோவில் ஒன்று அனந்தசயன விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனந்தசயன விஷ்ணு பாம்பணையில் சயனித்த நிலையில் புடைப்புச் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளார். பூதநாதா தீர்த்தக் குளத்திற்குப் போகும் வழியில் மணற்பாறை  ஒன்றில் வராஹர், கணேசர், மும்மூர்த்திகள், மகிஷாசுரமர்த்தினி, நரசிம்மர் ஆகியோர் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். பாதாமியின் வடக்குக் கோட்டைப் படிக்கட்டையொட்டி  சற்றுத் தொலைவில் செங்குத்தான பாறையில் கப்பெ அரபட்டா (Kappe Arabhatta) என்ற பெயருடன் கன்னடக் கல்வெட்டு செய்யுள் பொறிக்கப்பட்டுள்ளது. Continue reading

Posted in தொல்லியல், பெளத்த சமயம், மதம் | Tagged , , , , , , | 12 பின்னூட்டங்கள்

பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 3

பாதாமியில் முதன் முதலாவதாக அமைக்கப்பட்ட இந்த மூன்றாம் குடைவரை, தக்கணப் பகுதியில் அமைந்துள்ள இந்துக் குடைவரைகளிலேயே, மிகவும் தொன்மையானது. இங்கு காணப்படும் சாளுக்கிய மன்னன் கீர்த்திவர்மனின் கி.பி. 578 ஆம் ஆண்டுக் கல்வெட்டு, இந்தக் குடைவரை கி.பி. 578 – 580 ஆம் ஆண்டுகளுக்கிடையே அகழப்பட்டதாகப் பதிவு செய்கிறது. மூன்றாம் குடைவரையை அடுத்து இந்த இரண்டாம் குடைவரையும், இதன்பின் முதலாம் குடைவரையும், இறுதியில் நான்காம் குடைவரையும் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. வடக்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடைவரையும் விஷ்ணுவிற்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாதாமியில் உள்ள மற்ற மூன்று குடைவரைகளைக் காட்டிலும் அளவில் பெரியது. விஷ்ணுவின் அவதாரங்களான திரிவிக்கிரமா, ஆனந்தசயனா, வாசுதேவா, வராஹா, ஹரிஹரா மற்றும் நரசிம்மர் ஆகிய சிற்பத் தொகுப்புகள் இக்குடைவரையின் சுவர்களில் நேர்த்தியாகச் செதுக்கப் பட்டுள்ளன. இந்த மூன்றாம் குடைவரையில் அமைந்துள்ள சிற்பங்கள் எல்லோரா குகைகளில் காணப்படும் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடக்கு தக்காண (டெக்கான்) பாணிச் சிற்பங்களைப் போலவே உள்ளன. இந்தப் பதிவு பாதாமியின் மூன்றாம் குடைவரையைப் பற்றி விவரிக்கிறது. Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்