Tag Archives: கல்வெட்டுகள்

திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை

திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கியுள்ளது. சங்ககாலம் முதல், வரலாறு மற்றும் தொல்லியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள இவ்வூர் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ளது. எண்பெருங்குன்றங்கள் என்னும் சமணர்கள் வாழ்ந்த குன்றுகளில் ஒன்று திருப்பரங்குன்றம் ஆகும். லிங்க வடிவில் அமைந்த இம்மலையின் வடமேற்குப் பகுதியில் உள்ள அமண்பாழி அருகே உள்ள ஒரு குகைததளத்தில் சமணர் கற்படுக்கைகளும், மூன்று தமிழ் பிராமி கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலருகில் அமைந்துள்ள சுனையை ஒட்டியுள்ள பாறையில் மூன்று சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மலையுச்சியில், காசி விசுவநாதர் கோவிலையொட்டி அமைந்துள்ள மச்சமுனி சன்னதி அருகேயுள்ள பாறையில் கி.பி 8 – 9 ம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டு சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அருகில் தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மலையின் தென்பகுதியில் (தென்பரங்குன்றம்), உமை ஆண்டார் குடைவரைக் கோவில் உள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறை, ஒரு குடைவரைக் கோவிலாகும். இங்கு குடைவரைகள் அகழப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி,, துர்காதேவி, கற்பக விநாயர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்களுக்குச் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையனின் (கி.பி. 765-815) படைத்தலைவனான சாத்தன் கணபதி என்பவன் இக்குடைவரைக் கோவிலைச் சிவனுக்காக எழுப்பியதாக ஒரு கல்வெட்டுச் செய்தி பதிவு செய்துள்ளது.
Continue reading

Posted in குடைவரைக் கோவில், சமண சமயம், தொல்லியல், மதுரை, வரலாறு | Tagged , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்

திருநாதர் குன்று என்னும் சிறுகடம்பூர் குன்று, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிறுகடம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொன்மைமிக்க சமணத் தலமாகும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சமண சமயம் இப்பகுதியில் செழித்தோங்கி இருந்தது. இந்தச் சமண நினைவுச்சின்னம் பலராலும் நன்கு அறியப்பட்ட சமண சமய யாத்திரைத் தலமாகும். இங்குள்ள சமண தீர்த்தங்கரர்களின் திறந்தவெளி சமணச் சிற்ப அரங்கமும், கல்வெட்டுகளும் புகழ்பெற்றவை ஆகும். AASAI / REACH அறக்கட்டளை நடத்தி வரும் தமிழ் கல்வெட்டுப் பயிற்சி பாடத்திட்டத்தின் ஆறாவது தொகுதியை (Batch) சேர்ந்த மாணவர்கள் 2016 பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று களப் பயணம் மேற்கொண்டனர், இப்பயணத்தில் திருநாதர் குன்றும் அடங்கும். Continue reading

Posted in குகைகள், சமண சமயம், சுற்றுலா, தமிழ்நாடு, தொல்லியல், படிமக்கலை | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.

இரண்டாம் சேர குலமரபில் வந்த அரசர்கள் பெருமாள்கள் (Perumals) என்றும் சில சமயங்களில் குலசேகரர்கள் (Kulasekharas) என்றும் அழைக்கப்பட்டனர். இரண்டாம் சேர வம்சத்தவர்களின் அரசு (second Chera kingdom) நிறுவப்பட்டு, கி.பி 9 ஆம் நூற்றாண்டில், பெருமாள் அரசர்களின் ஆட்சி (rule of the Perumals) தொடங்கியது. மகோதயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த குலசேகரர்களின் ஆட்சி சேரர் (கேரள) வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. புகழ்பெற்ற இந்தப் பெருமாள் குல அரசர்கள் கி.பி 800 முதல் கி.பி 1124 வரை அன்றைய சேரநாட்டை ஆண்டு வந்ததாகக் கருதப்பட்டது. எலம்குளம் பி.என். குஞ்சன் பிள்ளை மற்றும் எம். ஜி. எஸ். நாராயணன் போன்றவர்கள் இடைக்காலச் சேரர்களின் வரலாற்றைப் பல்வேறு கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். மகோதயபுரம் குலசேகரர்களின் ஆட்சிக்காலம் குறித்த வரலாறு, அறிஞர்களிடையே வாதவிவாதப் பொருளாக இருந்து வருகிறது. Continue reading

Posted in கேரளா, சேரர்கள், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்