Tag Archives: விஜயநகரப் பேரரசு

பென்னேஸ்வர மடம் கல்வெட்டுக் குறிப்பிடும் ‘மாதரசன்பட்டணம்’ எனும் மதராசப்பட்டணம் 651 ஆண்டுகள் பழைமையானதா?

பென்னேஸ்வர மடம் கிராமம் பெண்ணையாற்றங்கரையில் உள்ள பெரிய பாறையின் சரிவில் விஜயநகரப் பேரரசின் மன்னன் கம்பண உடையர், தம் ஆட்சியாண்டு சகம்  1291 ஆம் ஆண்டுப் பிலவங்க வருஷம் பூர்வபட்சம் ரோகிணி நட்சத்திரத்திற்கு நிகரான வரலாற்று ஆண்டு    1367 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று பொறித்த கல்வெட்டில் மாதரசன்பட்டணம் (‘Maadarasanpattanam’) (சென்னை) குறித்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 வரிகளில் அமைந்த இக்கல்வெட்டுத் தமிழ் மொழியில் தமிழ் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தானைத் தலைவனான சோமப்ப தெண்ணாயக்கர் மகன் கூளிமாராய நாயக்கர் கண்ட வெற்றிகளைத் தொகுத்துச் சொல்லும் இந்தக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மாதரசன்பட்டணம் பற்றிய பதிவின்படி 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று மதராசப்பட்டணம் (சென்னை) நகரின் வயது 651 ஆண்டுகள் என்று நிச்சயமாகக் கூறுகிறார் முனைவர் எஸ்.இராஜவேலு. சென்னை வரலாற்று ஆசிரியர்களின் (Chennai Historians) கணிப்பின்படி சென்னையின் வயது 379 ஆண்டுகள் என்பது தவறான சித்தரிப்பு என்றும் இராஜவேலு கருதுகிறார். இந்தக் கணிப்பு புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஒருவேளை பொருந்தலாம்.  Continue reading

Posted in சென்னை, தொல்லியல், வரலாறு, விழாக்கள் | Tagged , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

தலக்காடு, கர்நாடகா: மணலில் புதையுண்ட கோவில்களின் நகரம்

தலக்காடு ஒரு வரலாற்று நகரம். இந்த நகரம் கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், திருமகுடல் நர்சிபூர் வட்டம், தலக்காடு போஸ்ட் PIN 571122 இல் அமைந்துள்ளது. காவேரி நதியின் இடது கரையில் அமைந்திருக்கும் இந்த நகரத்தைக் காண்பது வரலாற்றில் ஆர்வம் மிக்கவர்களுக்கு ஒரு விருந்து எனலாம். கி.பி.14 ஆம் நூற்றாண்டில் இந்த நகரம் 30 க்கும் மேற்பட்ட கோவில்களைக் கொண்டு விளங்கியது. கி.பி. 16 ஆம் நூற்றண்டில் இந்த அழகிய நகரத்தின் பண்டைய கட்டமைப்பு மணலில் மூழ்கியது கொடுமையான நிகழ்வாகும். மைசூர் உடையார்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த இயற்கைப் பேரிடர்கள் இந்த அழிவிற்கு வழிவகுத்தன என்று வரலாறு சொன்னாலும் புராணங்கள் வேறு வேறு கதைகளைச் சொல்லி வருகின்றன. இந்தப் பதிவு இந்த நகரிலுள்ள பஞ்சலிங்க ஆலயங்கள் பற்றியும், வரலாறு மற்றும் புராணக் கதைகள் பற்றியும் விவரிக்கின்றது. Continue reading

Posted in கோவில், சுற்றுலா, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

ஹம்பி விருபாட்சர் கோவில்

ஹம்பி தென்னிந்திய வரலாற்றில் ஆர்வம் கொண்டோர் மிகவும் விரும்பும் வரலாற்றுச் சின்னம். அழிவின் விளிம்பில் இருக்கும் கலைப்பொக்கிஷம். ஒரு புறம் துங்கபத்திரை ஆறும் மற்ற மூன்று புறமும் கற்குவியலாய் காணப்படும் குன்றுகளும் சூழ்ந்து காணப்படும் கிராமம். இது ஒருகாலத்தில் வலிமைமிக்க விஜயநகரப் பேரரசு (கி.பி 1336–1646) என்னும் இந்துப் பேரரசின் தலைநகராக இருந்துள்ளது அறிந்து வியப்பாயுள்ளது. 

ஹம்பியின் துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுடா மலை அடிவாரத்தில் விருபாட்சர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அருகிலேயே துங்கபத்ரா ஆறு செழிப்பாக ஓடுகிறது. ஹம்பியைச் சுற்றியுள்ள இடிபாடுகளின் நடுவே இக்கோவில் இன்னும் அழகாக உள்ளது. சுமார் 50 மீ. உயரத்தில் அமைந்துள்ள இக்கோவில்  இராஜகோபுரத்தின் நிழல் ஒரு துழையின் வழியே இங்குள்ள ஒரு சுவற்றின் மேல் தலை கீழாகத் தெரிவது விந்தையிலும் விந்தையாகும்.  ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது. Continue reading

Posted in கோவில், சுற்றுலா, தொல்லியல் | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்