Tag Archives: ஹம்பி

ஹம்பி சசிவேகலு, கடலேகளு கணேசா மற்றும் விஷ்ணுபாதம் கோவில்கள்

சசிவேகலு கணேசா (கன்னடம்: ಸಸಿವೇಗಲು ಗಾನಾಶಾ) கோவில் ஹேமகூடா (கன்னடம்: ಹೇಮಕುತ) மலைக்குத் தெற்கே உள்ள மலைச்சரிவில் உள்ளது. சசிவேகலு கணேசா சிலை அமைந்துள்ள மண்டபத்திற்குச்  சற்று வடக்கில் கடலேகளு கணேசா (கன்னடம்: ಕಡಲೇಕಲು ಗಾನಾಶಾ) என்ற மற்றொரு மாபெரும் கணேசா சிலை அமைந்துள்ளது. சசிவேகலு கணேசா மண்டபத்திற்குத் தெற்கில் விஷ்ணுபாதம் (கன்னடம்: ವಿಷ್ಣುಪದ) கோவில் அமைந்துள்ளது. இந்த மூன்று நினைவுச் சின்னங்களும் நடந்து சென்று பார்க்கும் தொலைவிலேயே அமைந்துள்ளன. இந்த மூன்றையுமே  45 – 60 நிமிடங்களில் பார்த்து முடித்துவிடலாம். சசிவேகலு கணேசா மண்டபத்திற்கு எதிரில் இந்தியத்  தொல்லியல் துறையினரால் நிறுவப்பட்ட ஹம்பி தள வரைபடத்தைக் காணலாம். Continue reading

Posted in கோவில், சுற்றுலா, தொல்லியல் | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஹம்பி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில்

ஹம்பி என்னும் சிதைந்த நகரத்தில் காணப்படும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மிகவும் கவர்சிகரமான சிற்பங்களில் ஒன்றாகும். ஹம்பியில் உள்ள ஒரே கல்லால் செய்யப்பட்ட மிகப்பெரிய தனிச்  சிலை என்பது இதன்  சிறப்பம்சம் ஆகும். ஹேமகூடா மலையின் தெற்குப் பக்கத்தில் இந்தச்  சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலையைச் சுற்றி நான்கு புறமும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இது ஒரு பிரம்மாண்டமான கற்சிலை என்றாலும் மிகவும் கவனத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இது ஹம்பியில் காணப்படும் மிக முக்கியமான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  இந்தச் சிலை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு சென்று பார்வையிடுகிறார்கள். Continue reading

Posted in கோவில், சுற்றுலா, தொல்லியல் | Tagged , , , , , | 10 பின்னூட்டங்கள்

ஹம்பி விருபாட்சர் கோவில்

ஹம்பி தென்னிந்திய வரலாற்றில் ஆர்வம் கொண்டோர் மிகவும் விரும்பும் வரலாற்றுச் சின்னம். அழிவின் விளிம்பில் இருக்கும் கலைப்பொக்கிஷம். ஒரு புறம் துங்கபத்திரை ஆறும் மற்ற மூன்று புறமும் கற்குவியலாய் காணப்படும் குன்றுகளும் சூழ்ந்து காணப்படும் கிராமம். இது ஒருகாலத்தில் வலிமைமிக்க விஜயநகரப் பேரரசு (கி.பி 1336–1646) என்னும் இந்துப் பேரரசின் தலைநகராக இருந்துள்ளது அறிந்து வியப்பாயுள்ளது. 

ஹம்பியின் துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுடா மலை அடிவாரத்தில் விருபாட்சர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அருகிலேயே துங்கபத்ரா ஆறு செழிப்பாக ஓடுகிறது. ஹம்பியைச் சுற்றியுள்ள இடிபாடுகளின் நடுவே இக்கோவில் இன்னும் அழகாக உள்ளது. சுமார் 50 மீ. உயரத்தில் அமைந்துள்ள இக்கோவில்  இராஜகோபுரத்தின் நிழல் ஒரு துழையின் வழியே இங்குள்ள ஒரு சுவற்றின் மேல் தலை கீழாகத் தெரிவது விந்தையிலும் விந்தையாகும்.  ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது. Continue reading

Posted in கோவில், சுற்றுலா, தொல்லியல் | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்