Tag Archives: மகாபாரதம்

குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 4: பீஷ்மரின் பிறப்பு

முற்பிறவியில் பிரம்மலோகத்தில் பிரம்மாவிடம் பெற்ற சாபத்தின் விளைவாக மகாபிஷக் பூவுலகில் சந்தனுவாகவும், கங்காதேவி மானுடப் பெண்ணாகவும் குரு தேசத்தில் பிறப்பெடுத்தனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. கங்காதேவி ஒவ்வொன்றாக அக்குழந்தைகளைக் கங்கை நீரில் மூழ்கடித்தாள். இதன் மூலம் ஏழு அஷ்ட வசுக்கள் சாபவிமோசனம் பெற்றனர். சந்தனு எதுவும் கேட்கக் கூடாது என்பது கங்காதேவி விதித்த நிபந்தனை. எட்டாவது அஷ்ட வசுவான பிரபாசன் குழந்தையாகப் பிறப்பெடுத்தான். அந்த எட்டாவது குழந்தையையும் இவள் மூழ்கடிக்க முயற்சிக்கையில் சந்தனு தடுத்துக் கேள்வி கேட்டான். அதனால் அக்குழந்தை உயிர் தப்பியது. இக்குழந்தைக்குத் தேவவிரதன் என்று பெயர் சூட்டினர். பின்னாளில் இவர் மேற்கொண்ட சாபததத்தின் காரணமாக இவர் பீஷ்மர் என்று பெயர் பெற்றார். Continue reading

Posted in குழந்தைகள், சிறுவர் கதைகள் | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 3: யயாதி

தேவயானியின் தோழி சர்மிஷ்டை. இருவரும் சேடிகள் புடைசூழ நீராடச் செல்கிறார்கள். ஒருவர் உடையை ஒருவர் மாற்றி அணிந்து கொண்டதால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சண்டை முற்றியதால், தேவயானியை சர்மிஷ்டை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டாள். அங்கு வேட்டைக்கு வந்த யயாதி மன்னன் தேவயானியைக் காப்பாற்றினான். பின்னாளில் யயாதி தேவயானியைத் திருமணம் செய்து கொண்டான். சர்மிஷ்டை தன் சேடிகள் புடைசூழ யயாதியின் நாட்டிற்குச் சென்று தேவயானிக்குச் சேவை செய்து வந்தாள். யயாதி – தேவயானி இணைக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. யயாதி சர்மிஷ்டையையும் இரகசியமாகத் திருமணம் செய்துகொண்டான். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.. தேவயானி இவர்களுடைய இரகசியத் திருமணம் பற்றித் தெரிந்து மிகவும் கோபம் அடைந்தாள். தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டாள். சுக்கிராச்சாரியாரும் யயாதி தன் இளமையை இழந்து தொண்டுக் கிழவனாக ஆகும்படி சாபமிட்டார் யயாதியின் வேண்டுகோளை ஏற்று, சுக்கிராச்சாரியார் தான் இட்ட சாபத்திற்குப் பரிகாரமும் சொன்னார். யயாதி தான் இழந்த வாலிபத்தை மீண்டும் பெற்றாரா? இழந்த அரச பதவியும், இல்லற சுகமும் யாதியை எப்படி மாற்றின. இந்தக் கதையின் முடிவை அறிந்து கொள்ள இந்தப் பதிவை ஆழ்ந்து படியுங்கள். கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள். Continue reading

Posted in குழந்தைகள், சிறுவர் கதைகள் | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்

குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 2: கசன் சுக்கிராச்சாரியாரிடம் கற்ற சஞ்சீவினி மந்திரம்

தேவ-அசுர யுத்தம் நடக்கிறது. இறந்த அசுரர்களை அசுரகுரு சுக்கிராச்சாரியார் சஞ்சீவினி என்ற மந்திரம் உச்சரித்து உயிர் பிழைக்க வைக்கிறார். இந்த மந்திரத்தைக் கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், கசன் மகரிஷியைத் தேர்ந்தெடுத்து அசுர குருவிடம் அனுப்புகிறார்கள். குருவின் மகள் தேவயானி கசன் அழகில் மயங்கி அவனைக் காதலிக்கிறாள்.

கசன் இந்த மந்திரத்தைத் தங்கள் குருவிடமிருந்து கற்றுக்கொண்டால் என்னவாகும்என்று அசுரர்கள் பயந்து போய் கசனை இரண்டு முறை கொடூரமாகக் கொலை செய்தனர். சஞ்சீவினி மந்திரத்தின் சக்தியால் சுக்கிராச்சாரியார் அவனை உயிர் பிழைக்க வைத்தார். மூன்றாம் முறை கசனைக் கொன்று, அவனைச் சுட்டெரித்த சாம்பலை மதுவில் கலந்து கொடுத்துச் சுக்கிராச்சாரியாரைக் குடிக்கச் செய்தனர். இம்முறை சுக்கிராச்சாரியார் எப்படி உயிர் பிழைக்க வைத்தார். மந்திரத்தை கசன் கற்றுக் கொண்டானா? கச்ச-தேவயானி காதல் என்ன ஆனது? விடை தெரிந்துகொள்ள இந்தச் சிறுவர் கதையைப் படியுங்கள். கருத்துக்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
Continue reading

Posted in குழந்தைகள், சிறுவர் கதைகள் | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்