Tag Archives: திருப்பதி

சிலா தோரணம்: திருமலா திருப்பதி மலையில் 160 கோடி ஆண்டுகள் பழைமையான பாறைப் படிமம்

சிலா தோரணம் (Telugu: సిలా తిరోనం English: Silathoranam) என்பது இரண்டு கற்பாறைகள் இயற்கையாகத் தோரண வடிவில் பாலம் போல் இணைந்து அமைந்துள்ள அபூர்வமான பாறை ஆகும். “சிலா” என்றால் “கல்,” “தோரணம்” என்றால் “வளைவு” என்றும் பொருள். சிலா தோரணம் என்றால் இயற்கையாக அமைந்த அபூர்வமான பாறை ஆகும். இந்த சிலா தோரணம் ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், திருமலா (Telugu: తిరుమల) பின் கோடு 517504 நகரிலிருந்து 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் தேசிய புவியியல் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். இதன் அமைவிடம் 13º41’9.56″ N அட்சரேகை 79º20’26.52″ E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இதன் உயரம் 976 மீ. (3,202 அடி) ஆகும்.

சிலாதோரணத்தைக் காண்பதற்குச் செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. ஆட்டோ மற்றும் ஜீ போன்ற வாகனங்கள் வாடகைக்குக் கிடைக்கும். நடந்து செல்ல விரும்பினால் வராகீஸ்வரர் கோவிலிலிருந்து நடந்து செல்வதற்கு 15- 20 நிமிடங்கள் வரை ஆகலாம். Continue reading

Posted in கோவில், சுற்றுலா | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சந்திரகிரி கோட்டை

விஜயநகரப் பேரரசைப் பற்றிப் பேசும்போது பெருமைக்குரிய மாமன்னர் ஸ்ரீகிருஷ்ணதேவராயரையும் இப்பேரரசின் தலைநகராக விளங்கிய ஹம்பியையும் நாம் நினைவுகூருவது வழக்கம். நம்மில் பலருக்கு விஜயநகரப் பேரரசின் இரண்டாம் தலைநகரும் கோடைகாலத் தலைநகருமான பெனுகொண்டாவைப் பற்றியும், மூன்றாம் தலைநகரான சந்திரகிரியைப் பற்றியும், நான்காம் தலைநகரான வேலூரைப் பற்றியும் தெரிந்திருக்காது! ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டலம், சந்திரகிரிக் கோட்டையின் கீழ்க்கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இராஜா மஹால், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் அருங்காட்சியகம், இராணி மஹால், சிறு ஏரி, புல்வெளி, சிதைந்த கோவில்கள், நுழைவாயில் மண்டபங்கள் பற்றிய பதிவு இதுவாகும். 
Continue reading

Posted in தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

திருமலை திருப்பதியில் கருட சேவை 2017

திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவீதியுலாவான கருட சேவை 27 செப்டம்பர் 2017 புதன் கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணிக்கு வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.  இந்த விழாவில் சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் கருட சேவை கண்டு மகிழ்ந்தார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.  கருட சேவை தரிசனத்திற்காக பக்தர்கள் மதியம் இரண்டு மணிக்கே நான்கு மாட வீதிகளில் அமைந்துள்ள காலரிகளில் இடம்பிடித்து காத்திருந்தார்கள். தொடக்கத்தில் பக்தர்களை மாட வீதியில் அனுமதிக்க மறுத்ததால் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆண்டாள் சன்னிதியில் இருந்து கொண்டுவரப்படும் தூளசி மாலையுடன் மூல விக்ரக மூர்த்தியான ஏழுமலையான் ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி அணிந்திருக்கும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க சங்கிலி, மகர கண்டி, லட்சுமி ஹாரம் போன்ற நகைகளை கருட சேவையின் போது மட்டும். ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி அணிந்து சேவை சாதித்தார். Continue reading

Posted in விழாக்கள் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக