Monthly Archives: ஜூலை 2018

மாண்யபுரா என்ற மண்ணே: அழிவின் விளிம்பில் மேலைக் கங்கர்களின் தலைநகரம்

மண்ணே பெங்களூரு ஊரகப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஆகும். ஒரு காலத்தில் இந்தக் கிராமம் மாண்யபுரா என்ற பெயருடன் மேலைக் கங்க வம்சத்தினரின் தலைநகரமாகத் திகழ்ந்தது. கி.பி. 350 ஆம் ஆண்டு தொடங்கிப் பத்தாம் நூற்றாண்டு வரை மேலைக் கங்க வம்சத்தினர் பண்டைய தென்-கர்னாடகத்தின் கணிசமான பகுதிகளை (மைசூர், ஹாசன் சாமராஜநகர், தும்கூர், கோலார், மாண்டியா மற்றும் பெங்களூரு பகுதிகளை) கங்கவாடி என்ற பெயரில் ஆண்டுவந்தனர். குவலாலபுரா என்றும் கோலாகலபுரா என்றும் அழைக்கப்பட்ட பண்டைய நகரம் இவர்களின் முதலாவது தலைநகரம் ஆகும். இஃது இன்றைய கோலார் நகராமாகும் (அமைவிடம் 13.13°N அட்சரேகை 78.13°E தீர்க்கரேகை). கோலார் தலைநகராக சுமார் 20 ஆண்டுகள்வரை இருந்துள்ளது. தொடர்ந்து சில காலம் மாண்யபுரா இவர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. இறுதியாக மைசூர் மாவட்டத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள தலக்காடு (அமைவிடம் 12.22°N அட்சரேகை 77.03°E தீர்க்கரேகை) இவர்களுடைய தலைநகரானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான தலைநகராக விளங்கிய மாண்யபுரா இன்று மண்ணே என்ற பெயருடன் ஒரு குக்கிராமமாகச் சுருங்கிவிட்டது. மேலைக் கங்கர்களால் கட்டப்பட்ட பல்வேறு கோவில் கட்டமைப்புகள் இன்று முற்றிலும் சிதைந்து போதிய பராமரிப்பின்றி இடிபாடுகளுடன் காணப்படுவது வேதனைக்குரியது. மேலைக் கங்கர்களின் இந்தத் தலைநகரத்தைச் சரித்திரம் மறந்துவிட்டது. Continue reading

Posted in கோவில், சுற்றுலா, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , | 6 பின்னூட்டங்கள்

எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ்: பெரிபுளூஸ்ஸின் கடற்பயணக் குறிப்புகளில் பண்டைய தமிழகம்

எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற கையெழுத்து ஆவணம் (manuscript document) பண்டைய ரோமின் கடல் சார்ந்த வர்த்தகம் (Maritime Trade) (அதாவது, செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல்) குறித்த மிகவும் இன்றியமையாத ஒற்றைத் தகவல் மூலமாகும் (single most important source of information). ஒரு கடற்கரையோரமாகக் கப்பலின் தலைமை மாலுமியின் என்னவெல்லாம் எதிர்பார்க்கக்கூடும் என்று கணித்து அங்குள்ள துறைமுகங்கள் மற்றும் கடலோர நிலப்பகுதிகளுக்கு இடையிலான தோராயமான தூரம் ஆகியவற்றை இந்த ஆவணம் பட்டியலிடுகிறது. அந்த அர்த்தத்தில், பெரிபுளூஸ் ஒரு வகையான பதிவு எனலாம். இந்த ஆவணம் கிழக்கு ஆப்பிரிக்கா (eastern Africa), தென் அரேபியா (southern Arabia) மற்றும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரங்களில் பல்வேறு துறைமுகங்களில் வாங்குவதற்கும் விற்பதற்குமான ரோம எகிப்தின் (Roman Egypt) செங்கடல் துறைமுகத்திலிருந்து வந்தவர்களுக்கான ஒரு சிறிய கையேடு எனலாம்.

இந்தக் கையெழுத்து ஆவணம் எரித்திரிய (செங்கடலைச்) கடலைச் சுற்றி கிரேக்க மொழி பேசும் எகிப்திய வணிக மாலுமிகளால் கிரேக்க நாட்டிலிருந்து அரபிக்கடல் வழியாகப் தென்மேற்குப் பருவக்காற்றைப் பயன்படுத்தி வரும் பாய்மரக் கப்பலில் மேற்கொள்ளப்பட்ட கடற்பயணத்தை விவரிக்கிறது. இந்தக் குறிப்புகள் அந்தக் காலத்திய இந்தியத் தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள், கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் மற்றும் கங்கையாற்றுச் சமவெளி பற்றி எல்லாம் விவரிக்கின்றன. Continue reading

Posted in தமிழ், தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

பனவாசி மதுகேஸ்வரா கோவில்: கடம்பர்களின் அற்புதக் கலைப்படைப்பு

மதுகேஸ்வரா கோவில், கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடகம், சிர்சி மாவட்டம், பனவாசி வட்டம், பெல்காம் வட்டாரம், பனவாசி (English: Banavasi; Kannada: ಬನವಾಸಿ) பின் கோடு 581318 கிராமத்தில் அமைந்துள்ள, கடம்ப வம்சதவர்களின் கட்டடக் கலைபாணியைப் பறைசாற்றும், கோவிலாகும். கடம்பர் காலத்திய கட்டடக் கலையின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் இக்கோவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கடம்ப மன்னர்களால் கட்டப்பட்டது. ஒரே கல்லாலான கல் மஞ்சமும், திரைலோக மண்டபமும் இந்தக் கோவிலின் உன்னதக் கலைப்படைப்பு ஆகும். இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற இக்கோவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாதலமாகவும் விளங்குகிறது.  Continue reading

Posted in கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , | 13 பின்னூட்டங்கள்