Category Archives: கற்பிக்கும் கலை

நட்ஜ் மீ: உங்கள் ஸ்மார்ட் போனில் ஆங்கிலத் திறனை மேம்படுத்த உதவும் கூகுள் அன்ராய்டு செயலி

நட்ஜ்.மீ என்பது ஆன்ராய்டு மொபைல் செயலியாகும். இந்தச் செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆங்கிலத்தை எளிதாகவும், சுவையாகவும், திறம்படவும் கற்றுக் கொள்ளவும் மேம்படுத்தவும் இந்தச் செயலி உங்களுக்கு உதவுவது திண்ணம். Continue reading

Posted in கணிதம், கற்பிக்கும் கலை, மொழி | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பல்லவர்கள் பேணிக் காத்த காஞ்சிக் கடிகை

தென்னிந்தியாவில் கடிகைகள் வடமொழிக் கல்விச் சங்கங்களாகத் (Academy) திகழ்ந்தன. கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து காஞ்சிக் கடிகை பல்லவர்களின் முடியாட்சி (Monarchy), இறைமாட்சி, ஆட்சி அமைப்பு முறை (Polity), அரசியல் (Politics), அமைச்சு (Ministry), படையியல் (Military), குடியியல் (Civics) போன்ற துறைகளில் செல்வாக்குப் பெற்றிருந்தது. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் என்று குறள் கூறும் நெறிகளுக்கேற்ப பல்லவ மன்னர்களின் அவையில் இடம்பெற்றிருந்த  கடிகையார் மிகவும் இன்றிமையாத தருணங்களில், அரசின் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கும் அங்கமாக இருந்தனர். காஞ்சிபுரம், கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல், தட்சஷீலா (கி.மு. 5 – கி.பி. 5 நூற்றாண்டு, பஞ்சாப், பாகிஸ்தான்) , நாளந்தா (கி.பி. 5 – கி.பி. 12, நூற்றாண்டு, பீகார்), விக்ரமஷிலா (கி.பி. 8 – 13 நூற்றாண்டு, பீகார்),   போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களைப் போலவே, ஒரு வேதாகமப் பல்கலைக்கழகமாகவும் புகழ் பெற்றிருந்தது. காஞ்சிக் கடிகை காஞ்சிபுரத்தின் மேம்பட்ட வேதக் கல்வி மையம் (Advanced Vedic Education Centre) என்று பரவலாக மதிக்கப்பட்டது. இஃது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்களைத் தன்பால் ஈர்த்தது. நாளந்தாவில் இருந்த புத்தமத அறிஞரும் துறவியுமானர் தர்மபால காஞ்சியில் இருந்து வந்தவர் ஆவார். Continue reading

Posted in கற்பிக்கும் கலை, கல்வி, சமஸ்கிருதம், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

ஹோவர்ட் கார்டனரின் பல்திறன் கொள்கை குழந்தைகளின் திறமையை கண்டறிய உதவுமா?

நம் குழந்தைகள் எல்லா விஷயத்திலும் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்கிறார் டாக்டர் ஹோவர்டு கார்டனர் (Dr.Howard Gardner) என்ற அமெரிக்க காக்னிட்டிவ் சைக்காலஜிஸ்ட். அமெரிக்காவில் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஹோவர்டு கார்டனரை ‘பல்திறன் கொள்கை’ (Multiple Intelligence) என்ற உளவியல் கொள்கை மூலம் பலருக்கு நன்றாக தெரியும். முதலில் Frames of Mind (1983) என்ற கட்டுரையில் ஏழு திறன்களை உலகுக்கு அறிவித்தார். பின்னாளில் இக்கோட்பாடு நீட்டிக்கப்பட்டு Intelligence Reframed (1999) என்ற கட்டுரையில் மாற்றியமைக்கப்பட்டது. கார்டனரின் பல்திறன் கோட்பாடு ஆசிரியர்களையும் (teachers) , பள்ளியின் தலைவர்களையும் (school leaders), சிறப்பு கல்வியாளர்களையும் (special educators) கவர்ந்தது. குழந்தைகளும், பருவ வயதினரும் பலவழிகளில் நுண்ணறிவாளனாய் இருக்க முடியும் என்று இவர்கள் புரிந்து கொண்டார்கள். ஐ.கியூ. டெஸ்ட் எனப்படும் அளவிடல் முறையைப் பயன்படுத்தி குழந்தைகளின் ஒன்றிரண்டு அறிவை மட்டுமே சோதிக்க முடியும். இந்த ஐ.கியூ டெஸ்டை வைத்து ஒரு குழந்தையின் நுண்ணறிவினை துல்லியமாக மதிப்பிட முடியாது என்பது இவர் வாதம்.

ஐ.கியூ. டெஸ்ட்டுக்குப் பதிலாக கார்டனர் விவரித்தது சற்று சிக்கலான கொள்கையாகும். மனித அறிவுத்திறன் (human intelligence) என்பது தன்னாளுகைக்கு உட்பட்ட, ஒன்றிற்கொன்று தொடர்புடைய, அறிவுசார்ந்த கொள்திறன்களாகும் (relatively autonomous intellectual capacities). இவற்றின் எண்ணிக்கை எட்டு அல்லது அதற்கு மேல்.

Continue reading

Posted in அறிவுத்திறன், உளவியல், கற்பிக்கும் கலை, பெற்றோர்கள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக