Category Archives: கற்பிக்கும் கலை

சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்

சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தச் சமூக சீர்திருத்தவாதி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இவர் தன் கணவர் ஜோதிராவ் கோவிந்த ஃபூலேயுடன் இணைந்து இந்தியாவில் பெண்களின் உரிமைக்காகவும் கல்விக்காகவும் போராடுவதில் முக்கிய பங்கு வகித்தார். மகாராஷ்டிர சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் முக்கியமான நபராக இவர் கருதப்படுகிறார். இதன் காரணமாகவே இவரை “முதல் தலைமுறையைச் சேர்ந்த நவீன இந்திய பெண்ணியவாதி” என்றும் “இந்தியப் பெண்ணியத்தின் தாய்” என்றும் “ராஷ்டிரமாதா” (தேசத்தின் தாய்) என்றும் குறிப்பிடப்படுகிறார். இந்தத் தம்பதியினர் 1848 ஆம் ஆண்டில் புனே நகரின், பிடே வாடா பகுதியில் முதல் பெண்கள் பள்ளியை நிறுவினர். பத்தொன்பதாம் நூற்றண்டில் வாழ்ந்த இவர் முன்னோடி பெண்ணியவாதியும், சமுதாய மறுமலர்ச்சியாளரும், கல்வியாளரும் கவிஞரும் ஆவார். பல இந்தியர்களுக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு, இந்தத் தம்பதியைப் பற்றித் தெரியவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். Continue reading

Posted in கற்பிக்கும் கலை, பெண்ணியம் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

பார்த்திவசேகரபுரம் செப்பேடு: ஆய் மன்னன் கோகருந்தடக்கன் நிறுவிய பார்த்தசாரதி கோவிலும் சாலையும் (குருகுலமுறை உயர்கல்வி நிறுவனம்)

பார்த்திவசேகரபுரம் பார்த்தசாரதி கோவில் (விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரம்), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், பார்த்திவபுரத்தில் அமைந்துள்ளது. ஆய்குல மன்னன் கருநந்தடக்கன் என்னும் கோகருநந்தடக்கன் (கி.பி. 857–885) 28 ஆண்டுகள் ஆட்சி செய்தான். இம்மன்னன் முஞ்சிறை கோவில் ஊராளர் சபையினரிடம் நெல் வயலுக்கு ஈடாகக் கொடுத்து பரிவர்த்தனை வாயிலாகக் கோவில் கட்டுவதற்காகப் பெற்ற நிலத்தில், கி.பி. 857 ஆம் ஆண்டு, பார்த்தசாரதிக்குக் கோவில் கட்டினான். “ஸ்ரீ வல்லபன்”, “பார்த்திவசேகரன்” ஆகிய பட்டங்களைச் சூடிக்கொண்டிருந்த கோகருநந்தடக்கன், இந்த கிராமத்திற்கு பார்த்திவசேகரபுரம் என்று தன் பட்டப்பெயரையே சூட்டினான். காந்தளூர் சாலை சட்டதிட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு தொண்ணூற்றைந்து சட்டர்க்கு (மாணவருக்கு) ஒரு சாலையையும் (குருகுலமுறை உயர்கல்வி நிறுவனம்) உருவாக்கினான். வேதப் பயிற்சி தவிர, ஆயுதப் பயிற்சியும் இங்கு வழங்கப்பட்டது. கோவில் மற்றும் சாலை ஆகியவற்றை அமைத்த பின்னர், அவை முறையாக நடைமுறைப் படுத்துவதற்காக இம்மன்னன் திட்டமிட்டு உருவாக்கிய நிர்வாக விதிமுறைகள் ஹுஸுர் அலுவலக (பார்த்திவபுரம்) செப்பேட்டில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் சாலைகள் (கல்வி நிறுவனங்கள்) எவ்வாறு செயல்பட்டன என்பதை இச்செப்பேட்டில் இருந்து அறியலாம்.
Continue reading

Posted in கற்பிக்கும் கலை, கல்வி, கேரளா, சமஸ்கிருதம், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதும் திறன் (Ambidextrous Writing Skills): அசத்தும் மத்தியப்பிரதேசத்துப் பள்ளி மாணவர்கள்.

நம்மில் பெரும்பாலோனோர் வலது கையைப் பயன்படுத்தி எழுதி வருகிறோம். இது மிகவும் பொதுவானது தானே. இதில் என்ன புதுமை இருக்கிறது? என்றுதானே கேட்க வருகிறீர்கள். உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.  இவர்கள் இடது கையை மட்டும் பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். இடது கைப்பழக்கம் உள்ளவர்களுடைய மூளை விரைவாகச் செயல்படுமாம். ஐ.க்யூ லெவல் 140 க்கும் மேலே உள்ளவர்கள் எல்லோரும் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள்தான் என்று ஒரு ஆய்வு பதிவு செய்துள்ளது.  

மத்திய பிரதேச மாநிலம், சிங்க்ருளி மாவட்டம், புதேல என்னும் கிராமத்தில் உள்ள வீணாவாதினி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் அனைவரும் இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதுகிறார்கள் என்பது தான் வழக்கத்துக்கு மாறுபட்ட வினோதமான வியப்பான செய்தி. இந்தக் குழந்தைகளைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லப்போகிறேன். கொஞ்சம் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைப் பின்னூட்டத்தில் கட்டாயம் பதிவு செய்யுங்கள்.
Continue reading

Posted in அறிவுத்திறன், கற்பிக்கும் கலை, கல்வி, குழந்தைகள், மூளை வளர்ச்சி | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்